Tuesday 14 July 2020

விற்பனைக்கு வரும் காதல் (செக்ஸ்) ரோபோக்கள்


ன்றைய காலகட்டத்தில் சரியான வேலையில்லாமல், வசதியில்லாமல், சொந்த வீடில்லாமல், வசதியிருந்தாலும்  மிக பெரிய படிப்பு இல்லாமல், பெண் வீட்டார் மெகா பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் இப்படி இன்னும் பல இல்லாம்களால் திருமணம் என்பது ஒரு நிறைவேறாத பெரும் கனவாகவே பல  குடிமகன்களுக்கு உள்ளது. நம் தமிழ்நாட்டில் திருமணத்திற்கு பிறகு தான் உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று சமூகம் கலாச்சார விதிமுறைகளை வகுத்துள்ளது. பெருநகரங்களில் அதுவும் ஹைஃபை ஆக மாறி விட்ட ஐடி வளாகங்கள் நிறைந்துள்ள பெரு நகரங்களில் இந்த கலாச்சாரம், கத்திரிக்காய் எல்லாவற்றையும் குப்பை தொட்டியில் போட்டு மூடி விட்டார்கள். அங்கேயே லிவ் இன் என்று திருமண பந்தம் இல்லாமலே ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் இணைந்து பிணைந்து வாழும் வாழ்க்கை முறை வந்து விட்டது. 

இது போன்ற உறவுமுறைகள்  சரியா தவறா என்ற விவாதத்துக்குள் எல்லாம் போய் இந்த கட்டுரை ஆராய போவதில்லை. ஏனெனில், இதே லிவ் இன் முறையில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் (ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும்) சேர்ந்து வாழும் தலைமுறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே பெருநகரங்களில் சனிக்கிழமை இரவுகளில் நடக்கும் பார்ட்டிகளில் தங்கள் பெண் துணையை அல்லது பெண் நட்பை நண்பர்களுக்குள் மாற்றி கொள்ளும் எக்ஸ்சேஞ்ச் செயல்பாடுகள் நடக்கும் காலம் இது. ஆனால் இவைகள் எல்லாம் கிராமங்களிலோ, சிறு நகரங்களிலோ சாத்தியமில்லை. இவற்றை பற்றி எல்லாம் உண்மை சம்பவங்களுடன் விரிவாக எழுத போனால் இந்த கட்டுரை ஒரு 18+ நாவலாக உருவெடுத்து விடும் அபாயம் உள்ளது, அதனால் இப்போது தலைப்பில் கொடுத்துள்ள ரோபோக்கள் பற்றிய விஷயத்திற்கு வருகிறேன்.

இது போன்ற சமூகம் விதித்திருக்கும் கலாச்சார விதிமுறைகளை எல்லாம் காலில் போட்டு நசுக்கும் வகையில் மனிதர்களின் பல வகையான தேவைகளுக்காக பல வகையான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. இப்போது மனிதனின் பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் ஆக செயல்படும் வகையில் (தேவைப்படும் போது உடலுறவு கொள்ளும் வகையில்) காதல் அல்லது செக்ஸ் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்ததுள்ளன. இந்த செக்ஸ் ரோபோக்கள் அழகான உயிருள்ள பெண்களை போலவே தோற்றமளிக்கின்றன. திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே முப்பது நாற்பது என்று வயது ஓடி வரும் பலருக்கு இனி இந்த மாதிரியான ரோபோக்கள் தான் உற்ற துணையாக இருக்கும் போலிருக்கிறது.



சமீபத்தில் (ஜனவரி மாதம் 22-25, 2020)  லாஸ் வேகாஸ் நகரில் நடந்த ஏ வி என் அடல்ட் எண்டர்டெயின்மெண்ட் எக்ஸ்போ - என்ற உலக புகழ் பெற்ற கண்காட்சியில் உயிருள்ள நிஜமான பெண்களை போலவே தோற்றமளிக்கும் செக்ஸ் ரோபோக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த செக்ஸ் ரோபோக்களை ரியல் டால் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளது.  ஹார்மணி என்ற புகழ் பெற்ற செக்ஸ் ரோபோவை ஏற்கெனவே இந்த நிறுவனம் தயாரித்து நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட செக்ஸ் பாட்களை கலிபோர்னியாவிலிருந்து செயல்படும் ரியல்போடிக்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ரியல் டால்ஸ்  நிறுவனத்திற்கு தயாரித்து வழங்குகிறது. இது ரியல் டால்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

 ஹார்மனி என்று பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு கொண்ட செக்ஸ் ரோபோ நிஜமான பெண்ணை போன்ற முக அமைப்பு கொண்ட தலையுடன் உள்ளது. முழுவதும் சிலிகான் கொண்டு தயாரிக்கப்பட்ட உடலுடன் இந்த தலை இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹார்மனி ரோபோ பொம்மை பேசும், ஜோக்குகள் சொல்லும், சிரிக்கும், பழைய உரையாடல்களில் இருந்து சுவாரஸ்யமான விஷயங்களை நினைவூட்டும். 

உண்மையான பெண்ணை போலவே தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள செக்ஸ் பாட்கள் தோற்றமளிக்கும் என்று ரியல் டால்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான மாட் மெக் முல்லென் தெரிவித்துள்ளார். 

இந்த வகையான செக்ஸ் ரோபோக்கள் சீன இணையதளங்களில்  11000 ருபாய் முதல் ஒரு லட்சம் ருபாய் வரை விலைக்கு வந்துள்ளன. 

Tuesday 12 December 2017

சர்ச்சையை கிளப்பிய பழங்குடி இன மக்களின் முத்த போட்டி




(கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்) 


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகுர் கிராமத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டசபை உறுப்பினர் சைமன் மராண்டி கிராம திருவிழா ஒன்றில் நடத்திய பழங்குடி இன மக்களின் முத்த போட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

திருமணமான 20 தம்பதிகள் கலந்து கொண்ட இந்த முத்த போட்டி, திருமணமான தம்பதிகளின் உறவை பலப்படுத்துவதற்காக நடத்தப்பட்டதாக சொல்கிறார் லிட்டிபரா தொகுதியை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் சந்தல் பர்கனா. 

இந்த போட்டி நடந்தபோது எடுக்கப்பட்ட காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, இதில் பெரும் கூட்டத்துக்கு மத்தியில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் முத்தமிட அதை கண்டு கூட்டம்  ஆரவாரம்  செய்கிறது. 

கடந்த 37 வருடங்களாக, வருடந்தோறும் கொண்டாடப்படும் டுமாரியா மேளா எனும் இந்த பழங்குடி இன திருவிழாவில் பழங்குடி நடனம், வில்வித்தை, கலை நிகழ்ச்சிகள் பல நடத்தப்படும், ஆனால் முதல் முறையாக இந்த வருடம் முத்த போட்டி  நடத்தப்பட்டுள்ளது.



ஜார்கண்ட் மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த சட்டசபை உறுப்பினர் ரமேஷ் புஷ்கர் "இந்த போட்டியை நடத்தியதன் மூலம் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி என்ன சாதித்தது என்று புரியவில்லை, பழங்குடி இன மக்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கேலிக்குள்ளாக்கும் விதத்தில் இந்த போட்டியை சைமன் மராண்டி நடத்தியுள்ளார், ஏற்கெனவே ஒரு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சட்டசபை உறுப்பினர் சட்டசபையில் உறுப்பினர்கள் வசதிக்காக பார் திறக்க கோரிக்கை வைத்துள்ளார், இப்போது இந்த முத்த போட்டியை நடத்தி உள்ளனர்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 

விற்பனைக்கு வரும் காதல் (செக்ஸ்) ரோபோக்கள்

இ ன்றைய காலகட்டத்தில் சரியான வேலையில்லாமல், வசதியில்லாமல், சொந்த வீடில்லாமல், வசதியிருந்தாலும்  மிக பெரிய படிப்பு இல்லாமல், பெண் வீட்டா...