(கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்)
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகுர் கிராமத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டசபை உறுப்பினர் சைமன் மராண்டி கிராம திருவிழா ஒன்றில் நடத்திய பழங்குடி இன மக்களின் முத்த போட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருமணமான 20 தம்பதிகள் கலந்து கொண்ட இந்த முத்த போட்டி, திருமணமான தம்பதிகளின் உறவை பலப்படுத்துவதற்காக நடத்தப்பட்டதாக சொல்கிறார் லிட்டிபரா தொகுதியை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் சந்தல் பர்கனா.
இந்த போட்டி நடந்தபோது எடுக்கப்பட்ட காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, இதில் பெரும் கூட்டத்துக்கு மத்தியில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் முத்தமிட அதை கண்டு கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
கடந்த 37 வருடங்களாக, வருடந்தோறும் கொண்டாடப்படும் டுமாரியா மேளா எனும் இந்த பழங்குடி இன திருவிழாவில் பழங்குடி நடனம், வில்வித்தை, கலை நிகழ்ச்சிகள் பல நடத்தப்படும், ஆனால் முதல் முறையாக இந்த வருடம் முத்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த சட்டசபை உறுப்பினர் ரமேஷ் புஷ்கர் "இந்த போட்டியை நடத்தியதன் மூலம் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி என்ன சாதித்தது என்று புரியவில்லை, பழங்குடி இன மக்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கேலிக்குள்ளாக்கும் விதத்தில் இந்த போட்டியை சைமன் மராண்டி நடத்தியுள்ளார், ஏற்கெனவே ஒரு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சட்டசபை உறுப்பினர் சட்டசபையில் உறுப்பினர்கள் வசதிக்காக பார் திறக்க கோரிக்கை வைத்துள்ளார், இப்போது இந்த முத்த போட்டியை நடத்தி உள்ளனர்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment